பந்திங்:
ஆலயங்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை இலவசமாக செய்து தர மஹிமா தயார் என்று அதன் தலைவர் டத்தோ என். சிவக்குமார் கூறினார்.
நாட்டில் உள்ள ஆலயங்களில் தரவுகளை சேகரிக்கவுள்ளதாக மலேசிய இந்து சங்கம் கூறியுள்ளது.
இந்து சங்கம் கூறியுள்ள இத்திட்டம் மகத்தானது. ஆனால் இத் திட்டத்தை மேற்கொள்ள இந்து சங்கம் நிதியை கோரியுள்ளது.
இந் நிதி எப்போது கிடைப்பது. எப்போது தரவு சேகரிப்பு பணியை தொடங்குவது என்பது தான் தற்போதைய கேள்வியாகும்.
ஆக இந்த ஆலயங்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை இலவசமாக மேற்கொள்ள மஹிமா தயாராக உள்ளது.
இதற்காக இந்து சங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் மஹிமா தயார். இந்து சங்கம் எங்களுடன் இணையத் தயராக உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பேரா மாநில அரசுக்கு சொந்தமான நிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆலயங்கள் கட்ட தடை என ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அறிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பை பாராட்டுகிறேன்.
ஆனால், சிக்கலில் இருக்கின்ற ஆலயங்களில் நிலங்களை அவர் எப்படி பாதுகாக்க போகிறார் என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது.
ஆக இப்பிரச்சினைக்கும் சிவநேசன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.