கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள ஆலயங்களுக்கு இடையே ஒற்றுமையை மேலும் வலுப்பட வேண்டும்.
இதுவே மஹிமாவின் இலக்கு என்று அதன தலைவர் டத்தோ என். சிவக்குமார் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவல் ஆலயத்தில் ஸ்ரீ ருத்ர சர்பேஸ்வரர் பாராயணம் மகா யாகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆலயத் தலைவர் சிவன் சர்மாவின் அழைப்பின் பேரில் இவ்விழாவில் கலந்து கொண்டேன்.
இந்த வருகையில் போது ஆலய குழுவிற்கு மஹிமா உறுப்பினர்களிடம் சான்றிதழை வழங்கினேன்.
மஹிமாவின் ஒரு பகுதியாக அவர்களை அதிகாரப்பூர்வமாக வரவேற்றேன்.
மேலும் ஆலயங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்து சமூகத்தை மேம்படுத்துவதிலும் மஹிமாவின் முயற்சிகளை ஆலயங்கள் தீவிரமாக ஆதரிக்க வேண்டும்.
இந்த நிகழ்வில் பக்தர்களிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்தது.
இது ஒரு அர்த்தமுள்ள, வெற்றிகரமான நிகழ்விற்கு கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்று சிவக்குமார் கூறினார்.