Event Description

ஆறாவது அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாடு சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது: டான்ஶ்ரீ நடராஜா வாழ்த்துரை வழங்கினார்

சென்னை:

ஆறாவது அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாடு சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், அனைத்துலக சைவசிந்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறுகிறது.

இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டின் தொடக்க விழா இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் தலைமையுரையாற்றினார்.

திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293ஆவது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ ஹரிஹா ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46ஆவது குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் ஆசி, அருளாசியுரை வழங்கினர்.

தமிநாட்டு ஆளுநர் ஆர்.என். இரவி, மத்திய சுகாதார, குடுமப நலத்துறை அமைச்சர் ஶ்ரீ ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர். நடராஜா சைவ சித்தாந்த ஆங்கில நூல் தொகுப்பை பெற்று வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக டான்ஶ்ரீ நடராஜா தலைமையில் 70க்கும் மேற்பட்ட மலேசிய பேராளர்கள் இந்த அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன், மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன் உட்பட பல தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 

Tan Sri received the first copy of Special souvenir book

Chairman of Sri Maha Mariamman Kuil Dhevasthanam Kuala Lumpur, Tan Sri Datuk Dr. R. Nadarajah received the first edition of special souvenir book in English which was lauched and handed over by His Excellency Thiru. R. N. Ravi, Hon'ble Governor of Tamil Nadu in connection with 6th International Saiva Siddhartha Conference 2025. The conference which is being organised from 3rd - 5th May 2025, organised by Thirukayilaya Parambarai Dharmapuram Aadheenam's International Institute of Science & Technology, Kattankulathur and SRM Institute of Science & Technology, Kattankulathur. About 300 conference papers were submitted with 7 sessions gathered over 1000 delegates from more than 14 countries.

Hon’ble Shri Jagat Prakash Nadda, Union Minister for Health & Family Welfare and Chemicals & Fertilizers participated as the chief guest and 27th Guru Maha Sannidhanam of the Adheenam Srila Sri Masillamani Desiga Gnanasambanda Swamigal.