Event Description

பத்துமலையில் இந்திய பாரம்பரிய இசைக் கருவிகள் வாசிக்கும் பயிற்சி; இலவசமாக வழங்கப்படும்: டத்தோ சிவக்குமார் கோம்பாக்:

கோம்பாக்:

பத்துமலையில் இந்திய பாரம்பரிய இசைக்  கருவிகள் வாசிக்கும் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.

மஹிமா தலைவரும் டிஎஸ்கே சங்கத்தின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலை திருத்தலத்தில் பிரம்மாண்ட இசைக் கதம்பம் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஶ்ரீ ஐஸ்வர்யா பைன் ஆர்ட்ஸ் ஏற்பாட்டிலான இவ்விழாவிற்கு கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானம் முழு ஆதரவு வழங்கியது.

மேலும் டிஎஸ்கே குழுமம், மஹிமா இணைந்து இவ்விழாவை சிறப்பாக நடத்தின.

கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்கள் தங்களின் படைப்பாற்ற்லை வழங்கினர்.

குறிப்பாக முருகப் பெருமான் முன்னிலையில் தெய்வீக இசை சமர்ப்பணமாக இது அமைந்தது.

இவ்விழாவை தொடக்கி வைத்து பேசிய அவர், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஊக்குவிப்பதன்வழி அவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க உறுதுணையாக இருக்கும்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா சமுதாய மக்கள்  பயன்  பெற வேண்டும் என்ற அடிப்படையில் பத்துமலையில் கலாச்சார மையத்தை அமைத்துள்ளார்.

அங்கு தற்போது இந்து சமய, தேவார வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அடுத்து இந்திய பாரம்பரிய இசைக்  கருவிகள் வாசிக்கும் பயிற்சி வகுப்புகள் இங்கு இலவசமாக வழங்கப்படும்.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்