சிரம்பான்:
இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவதில் ஆலயங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
சிரம்பான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
மஇகா சிரம்பான் கார்டன் நூரி இண்டா தொகுதி ஒத்துழைப்புடன் இவ்விழா நடைபெற்றது.
பெண்கள் பொங்கல் வைத்ததுடன் பல பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பொங்கல் விழா தை மாதத்தில் மட்டும் தான் கொண்டாடப்பட வேண்டும் என்றால் அது தவறு.
காரணம் பொங்கல் ஒற்றுமை விழா. நமது பாரம்பரியம, கலாச்சாரத்தை காப்பாற்றும் விழா.
இதுபோன்ற விழாக்கள் தொடந்து நடத்த வேண்டும்.
இம்முயற்சியை மேற்கொண்ட ஆலய நிர்வாகம் உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
அதே வேளையில் இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் கண்டீப்பாக வேட்டி, பாரம்பரிய ஆடை அணிய வேண்டும் என விதிமுறை உள்ளது. இதுவும் பாராட்டுக்குரியது.
இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற இதுபோன்ற ஆலயங்கள் முன்னோடியாக உள்ளனர்.
ஆக நாட்டில் உள்ள ஆலயங்கள் நமது இந்து சமயம், பாரம்பரியம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
இதனிடையே சிரம்பான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக இணைந்துள்ளது.
இதன் மூலம் இவ்வாலயத்துடன் இணைந்து மஹிமா செயல்படும் என்று அவர் கூறினார்.